முக்கிய செய்திகள்

வெளியானது ஜெயலலிதா சிகிச்சை வீடியோ…!


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது பழச்சாறு அருந்துவது போன்ற வீடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு தொடர்ந்து 75 நாட்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். துவக்கத்தில் அவருக்கு காய்ச்சல் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்கு நுரையீரல் மற்றும் கிட்னி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக அப்பலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டது.

அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மாரடைப்பில் மரணம் அடைந்தார் என்ற செய்தியை மருத்துவமனை வெளியிட்டது.

அவரது இறப்பும், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்ததும் ஒரு மர்மமாகவே இருந்து வந்தது. மர்மம் நீங்காத நிலையில், கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது.

Jayalalithaa video published