இதுதான் ஜெ., வின் புதிய சிலை!

அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் புதிதாக வைக்கப்பட உள்ள ஜெயலலிதா சிலையின் படம் வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை, அவரைப் போன்ற சாயலில் இல்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அதனை மாற்றிவிட்டு புதிய சிலையை வைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி புதிதாக வைப்பதற்காக தயாராகி வரும் ஜெயலலிதா சிலையின் படத்தை, அதிமுக தகவல் தொழில்நுட்பக் குழுவினர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இதுதான் அந்தச் சிலையின் படம். இதுவேனும் ஜெயலலிதாவின் சாயலில் இருக்கிறதா என்பது சிலை வைக்கப்பட்ட பின்னர்தான் தெரியும். 

jeyalalitha’s new statue