
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். தனது கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றிபெற்றார். எதிர்கட்சியான பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து அவையிலிருந்து வெளியேறினர்.