முக்கிய செய்திகள்

‘ஜிமிக்கி’ கம்மல் பாடலுக்கு நடிகை ஜோதிகா நடனம்…


மலையாளத்தில் மோகன்லால் நடித்த ’வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம் பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. கடந்த ஆண்டில் வெளிவந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ‘ஜிமிக்கி’ கம்மல் பாடலுக்கு நடிகை ஜோதிகா நடனமாடி கலக்கப் போகிறார்

திருமணத்துக்குப் பிறகு, மீண்டும் நடிப்பில் பிஸியாகியிருக்கும் ஜோதிகா, தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் கதையை தாங்கிப் பிடிக்கும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

விதார்த், லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் ஆர்.ஜெ.சான்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர். நடிகர்சிம்பு இந்தப் படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார். ஃபாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. அறிமுக இசையமைப்பாளர் A.H. காஷிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

கேரளாவைக் கடந்து நாடு முழுவதும் 84 மில்லியன் ரசிகர்களை கடந்து, இணையத்தைக் கலக்கிய ’ஜிமிக்கி கம்மல்’ பாடல் உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருக்கும் ஃபாப்டா மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம், ’காற்றின் மொழி’ படத்தில் அந்தப் பாடலை பயன்படுத்துகின்றனர்.

’காற்றின் மொழி’யில் இடம் பெறும் இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடி கலக்குப் போகிறார் ஜோதிகா! டான்ஸ் மாஸ்டர் விஜியின் நடன அமைப்பில் ஜோதிகாவுடன் லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல், ஆர்.ஜெ.சான்ட்ரா ஆகியோர் இப்பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.