முக்கிய செய்திகள்

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் சென்னை வந்தடைந்தது..

ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் ரயில் சென்னை வில்லிவாக்கத்திற்கு வந்தடைந்துள்ளது.

இதையடுத்து, வில்லிவாகத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் நிலையத்துக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் சென்னை எடுத்துவரத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.