தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய ஜூலை 18 இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்.ஒவ்வொரு ஆண்டும் “ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்!”.
மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதி எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்பட்டு தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் ₹1 லட்சம் மதிப்பிலான பொற்கிழி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.