முக்கிய செய்திகள்

ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு: முதல்வர் பழனிசாமி..

சென்னை உட்பட முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5-ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஜூலை 5 -ம் தேதி வரை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும்.

முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.