முக்கிய செய்திகள்

ஜூன் 1 முதல் நாடு முழுவதும் இரயில்கள் இயக்கம் : இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்…

ஜூன் 1 முதல் ,ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 4 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இரயில், விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளி மாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மத்திய இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பு, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஏ.சி.அல்லாத 200 இரயில்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த 200 இரயில் பெட்டிகளும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளாகும்.

இரயில்களில் பயணிக்க விரும்பும் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.