ஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..


ஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியக்கூடிய பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.