உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் : குடியரசு தலைவர் ஒப்புதல்

நாட்டின் 50வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதியரசர் சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். நவம்பர் 9ந் தேதி முதல் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
தற்போது உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி ஒய் சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10ந் தேதி வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

ஆ.ராசாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் …

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்த விவாதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்..

Recent Posts