கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்,மேலும்லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிகமாக பிரதமராக தொடர்வதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
2015-ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக இருந்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியினர் இடையே கடும் அதிருப்தி நிலவியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.