முக்கிய செய்திகள்

தென்னிந்திய நதிகளை இணைத்து விட்ட மறுநாளே நான் கண்மூடினாலும் கவலைப்படமாட்டோன் : நடிகர் ரஜினிகாந்த்..


தென்னிந்திய நதிகளை இணைத்து விட்ட மறுநாளே நான் கண்மூடினாலும் கவலைப்படமாட்டோன் என காலா பட ஆடியோ வெளியீட்டின் போது நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பேசினார்.மேலும் அவர் திமுக தலைவர் கருணாநிதியின் குரலை மீண்டும் கேட்க வேண்டுமென கோடிக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களில் நானும் ஒருவன் என்று பேசினார்.

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி – பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. ரஜினியுடன், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.