கபாலி, காலாவை ஓரங்கட்டிய ‘பேட்ட’…

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. இதில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக முன்னணீ மாஸ் ஹீரோயின்கள் சிம்ரன் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, மாளவிகா மோகனன், சனந்த் ரெட்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.