முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஓரே வாரத்தில் மூன்றாவது வெடிகுண்டு தாக்குதல்: 95 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகினர். 158 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதைக் காவலர்கள் தடுத்து நிறுத்தியபோது அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டைத் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இந்தத் தாக்குதலில் காவல்துறையினர், அப்பகுதியில் நின்றிருந்தோர் என 95 பேர் உயிரிழந்தனர். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினரும் ராணுவத்தினரும் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 158 பேர் காபூல் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்குத் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட்டுள்ள மூன்றாவது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

Kabul attack: Taliban kill 95 with ambulance bomb in Afghan capital