நிலை மாறும் “கஜா” புயல் : நவ 15 கடலூர் – பாம்பன் இடையே கரை கடக்கும்

கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே நவம்பர் 15 அன்று முற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 820 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் நாகை – சென்னை இடையே கரையைக் கடக்கும் என முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடலூர் – பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலமான காற்று வீசுவதுடன், இது தீவிர புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதித்துள்ள தமிழக அரசு, முன்கூட்டியே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்பவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி

Recent Posts