மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுரஅடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் எச்.சி.எல். குழுமத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் திருமதி ரோஷிணி நாடார், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாண்புமிகு நகர்புற உள்ளாட்சித்தறை அமைச்சர் கே.என்.நேரு,மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்பமை நீதியரசர்கள், மதுரை மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு உயரதிகாரிகள், அரசு உயர் அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

காமராஜரின் 121 ஆவது பிறந்த தினம்: காரைக்குடியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மாங்குடி எம்எல்ஏ மரியாதை…

நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பதியப்பட்ட ₹100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து…

Recent Posts