
கலைஞரின் ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை சேலம் வாழப்பாடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களை நோய் பாதிப்பிலிருந்து முன்கூட்டியே பாதுகாக்கும் நோக்கத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை தொடர்ந்து, வரும் முன் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2006ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் வரும் முன் காப்போம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.