முக்கிய செய்திகள்

கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் : மு.க. ஸ்டாலின் பேச்சு..

விழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம். முத்தமிழ் கலைஞர் என்ற அறக்கட்டளையும் தொடங்கப்படும்.

அறக்கட்டளை மூலம் குடிமைப்பணி பயிற்சி மையமும் நடத்தப்படும். நோயாளிகள் சிகிச்சை பெற அறக்கட்டளை மூலம் நிதியுதவி வழங்கப்படும்.

மத்திய பாஜக அரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டில் வறுமை ஒழிந்துவிட்டதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதா? என்னுடைய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்.

கருணாநிதி மகன் சாதித்தான் என்பதை நிரூபிக்க வேண்டும், அதற்கு நீங்கள் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.