முக்கிய செய்திகள்

கலைஞர் வெண்கல சிலை திறப்பு விழா: சோனியா காந்திக்கு அழைப்பு..

முன்னாள் முதல்வா் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் பதவியை 5 முறை அழங்கரித்தவரும், தி.மு.க.வின் 50 ஆண்டு கால தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உயிாிழந்தாா்.

கலைஞரின் விருப்பப்படி அறிஞா் அண்ணாவின் சமாதி அருகிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை நிறுவ அக்கட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழா நவம்பா் 15ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியாகாந்திக்கு தி.மு.க. சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உடல் நலத்தை காரணம் காட்டி அவா் கலந்துகொள்ள மாட்டாா் என்றும், அவருக்கு பதில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கலந்து கொள்வாா் என்று தகவல் வெளியாகி உள்ளது.