முக்கிய செய்திகள்

கலைஞர் உடல்நிலை … லைவ் அப்டேட்….

சேலம் சென்றி ருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்புகிறார். இரவு 1 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி வர இருப்பதாக தகவல்.

காவேரி மருத்துவமனையில் எதிரே அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கு வெளியே தொண்டர்கள் வெளியேற்றம் .

கலைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆ.ராசா செய்தியாளர்களுக்கு பேட்டி…

பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். மருத்துவக் குழுவால் உடனடியாக சீர் செய்யப்பட்டு கலைஞர் தற்போது நலமாக உள்ளார்: ஆ.ராசா

தொண்டர்கள் வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல்… தொண்டர்கள் வெளியேற மறுத்து தொடர்ந்து முழக்கம்

பேராசிரியர் அன்பழகன் காவேரி மருத்துவமனைக்கு வருகை

மருத்துவமனை அறிவிப்பை ஏற்று தொண்டர்கள் கலைந்து செல்ல ஒலி பெருக்கி மூலம் காவல்துறை அறிவிப்பு

காவல்துறைக்கும் தொண்டர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு

மருத்துவமனை முன்பாக கூட்டம் அதிகரிப்பு

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

மற்றவர்களும் ஒவ்வொருவராக புறப்பட்டு செல்கின்றனர்…

கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்

துணை ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

ஜூலை 30ந் தேதி தினகரன் நாளிதழ் தலைப்பு செய்தி நிறுத்தி வைக்க கலாநிதி மாறன் உத்தரவிட்டிருப்பதாக தகவல்

சன் டிவியின் அனைத்து நேரடி ஒளிப்பரப்பு வாகனங்களும் சென்னைக்கு இரவு 12 மணிக்குள் வர உத்தரவு எனவும் தகவல்

மேலும் அவைகள் குறிப்பிட்ட இடங்களில் சென்று நிறுத்தி வைக்க தயார் நிலையில் இருக்க சன் டிவி உத்தரவிட்டிருப்பதாக தகவல்

இரவு 11.15 – முக.ஸ்டாலின் அவரது இல்லத்தில் உள்ளார்

காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறு திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

Kalaingar… Live Updates