முக்கிய செய்திகள்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று..


இன்றும் நம் நினைவில் நீங்கா இடம் பெற்ற நகைச்சுவை செல்வர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி கலைவாணர். திரைப்படங்களில் நகைச்சுவை மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர். திரை மூலம் மக்களின் மூடப் பழக்கங்களை தீயிட்டுக் கொளுத்தியவர்.அறிவார்ந்த விசயங்களை தன் நகைச்சுவை மூலம் கடைக் கோடி மனிதனுக்கும் கொண்டு சென்றவர்.