அப்துல்கலாமின் 87வது பிறந்த தினம் : நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி..

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் 87வது பிறந்த தினம் இன்று.

பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அடுத்துள்ள பேய்க்கரும்பில் அமைந்துள்ள கலாம் அவர்களின் நினைவிடத்தில் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

அங்கு கலாமின் அண்ணன் முத்து மீரா மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்