
கனியாமூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை அறிக்கையை 29-ம் தேதி தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். டிராக்டர் கொண்டு பேருந்தை சேதப்படுத்துவதெல்லாம் சகித்து கொள்ளவே முடியாது.
விசாரணையில் காவல்துறையின் முழு பவரையும் காட்ட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கலவரத்தின் பிண்ணனியில் அரசியல் கட்சிகள் இருந்தாலும் பராபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னசேலம் பள்ளி வன்முறைக்கு தொடர்புடைய வாட்ஸ்-அப் குரூப் அட்மினை கைது செய்ய வேண்டும் என்றார் உயர்நீதிமன்ற நீதிபதி