கல்லல் அருகே கள்ளிப்பட்டு கிராம கண்மாய் தூர்வாரும் பணியில் மோசடி : பொதுமக்கள் கொதிப்பு..


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கல்லல் ஒன்றியம் கள்ளிப்பட்டு கிராமத்தில் இருக்கும் உடையார் குளம் கண்மாய் தூர்வாரும் பணிக்கு அரசால் ரூபாய் 1400000லட்சம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் ஒப்பந்ததாரர் மற்றும் சிலரும் சேர்ந்து கண்மாய்தூர்வாரும் பணியை செய்யாமல் நூறு நாள் திட்டத்தில் பெண்கள் வெட்டிய குழிகளை மேலாக சுரண்டிவிட்டு பணியை முழுமையாக முடிக்காமல் அரசு அதிகாரிகள் உத்தரவுகளை உதாசீனம் செய்து வருகிறார்கள்

இதில் அரசியல் தலையீடுகள் அதிகம் இருப்பதால் , உடையார் குளம் பாசன விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டோம். என்று கள்ளிப்பட்டு கிராம பொதுமக்கள் கொதிப்படைந்து கூறினர்.

சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் உடையார் குளம் கண்மாயை முறையாக தூர்வாரி மழை நீரை சேகரிக்க வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாசியர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.


 

பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவு..

மதுரையில் புத்தக கண்காட்சி தொடங்கியது

Recent Posts