முக்கிய செய்திகள்

கல்லணையிலிருந்து 29,568 கனஅடி தண்ணீர் திறப்பு..


தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக 29,568 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரியில் 9512 கனஅடியும், வெண்ணாற்றில் 9022 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3004 கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் 8030 கனஅடியும் நீர்திறக்கப்பட்டு வருகிறது.

திருச்சி முக்கொம்பிற்கு விநாடிக்கு 68,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 29,000 கனஅடியும், கொள்ளிடம் அணையில் இருந்து 38,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.