முக்கிய செய்திகள்

எம்ஜிஆருக்கு தனியார் விமானம், ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானமா?: கடுகடு கமல்…

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட போது கூட, அவருக்கு தனியார் விமானம்தான் வழங்கப்பட்டது என்றும்., ஓபிஎஸ் உறவினருக்கு ராணுவ விமானம் வழங்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

 காவிரியில் தற்போது அதிகமான அளவில் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது, இதுவும் கணக்கில் கொள்ளப்படும் என்று கர்நாடக கூறுகிறது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்றுதான். நான் கர்நாடகத்திற்கு சென்ற போது நம்முடைய விவசாயிகளின் நன்மைக்காக குருவை சாகுபடிக்கு பிச்சை கேட்டது போல் தான் கேட்டேன். ஆனால் காவிரி ஆணையம் வேண்டாம் என்பதற்காக சென்றது போல் அரசியலுக்கக திரித்து கூறிவிட்டனர். காவிரி நீர் ஆனையம் ஒரு பெரிய வெற்றி. அதை தக்க வைத்து கொள்வது இரு மாநிலங்களின் கையில் தான் உள்ளது. இல்லை என்றால் மீண்டும் பேருந்துகளை உடைக்கும் நிலைமை தான் வரும். ஒ.பி.எஸ் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குபதிவு செய்திருப்பது குறித்து கேட்கிறீர்கள். இந்த அரசு நீக்கப்பட வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது போன்ற காரணங்களால் தான் நான் அரசியலுக்கு வந்தேன். ஒ.பி.எஸ் தம்பிக்கு இராணுவ விமானத்தை அளித்துள்ளனர். அரசியல் மாண்பு சீரழிந்து வருவதாக தான் நினைக்கிறேன். ஏன் என்றால் எம்.ஜி.ஆர் உயிருக்கு போராடிய போது அவருக்கு தனியார் விமானத்தை தான் கொடுத்தனர். எச்.ராஜா எட்டு வழிச்சாலை குறித்து கமல் பேசக்கூடாது என்ற கூறுவதை ஏற்க முடியாது. யார் வேண்டுமானாலும் பேசலாம். பேச கூடாது என்று எச்.ராஜா கூறுவது என்ன பாணி என்று தெரியவில்லை. விசாரணை ஆனையங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று  நீதிபதிகள் கூறியுள்ளனர்.  எல்லாமே கண்துடைப்புதானே. லோக் ஆயுக்தா தமிழகத்தில் அமல்படுத்தி இருப்பது வெரும் பெயரளவில் கண் துடைப்புக்காக மட்டுமேதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Kamal cretisaize for military flight given to OPS brother