கமலின் ரசிகன் நான் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..


மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் கமல் கட்சி தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக மக்கள் இனி ஊழல் கட்சிகளுக்கு ஓட்டு போடவேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். ஆம் ஆத்மி தொடங்கிய ஒரே ஆண்டில் காங்கிரஸ், பாஜகவை மக்கள் ஒதுக்கி விட்டனர் என்று பேசினார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, `தமிழகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். கமல்ஹாசனை ஒரு நல்ல நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த காரணத்துக்காக மட்டுமே நான் இங்கு வரவில்லை. அவர் ரியல் லைஃப் ஹீரோ. தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான கட்சியின் தொடக்கவிழாவில் கலந்துகொள்வதில் பெருமையும், கௌரவுமும் கொள்கிறேன்.

டெல்லியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியை நாங்கள் தொடங்கினோம். மாற்றத்தை விரும்பிய டெல்லி மக்கள் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை எங்களுக்கு அளித்தார்கள். டெல்லி மக்கள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளையும் மக்கள் நிராகரித்தனர். தமிழக மக்கள் அ.தி.மு.க. – தி.மு.க. என இரண்டு ஊழல் கட்சிகள் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள். உங்களுக்கு ஊழல் வேண்டுமென்றால் அவர்களுக்கு வாக்களியுங்கள்.

நேர்மையான அரசு வேண்டுமானால் கமல்ஹாசனுக்கு வாக்களியுங்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய சூழல் உங்களுக்கு இருந்தது. ஆனால், தற்போது நீங்கள் மாற்றத்தை நோக்கி கமலுக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய கட்சிகளை அகற்ற தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். டெல்லி மக்கள் நிகழ்த்திய சாதனையை முறியடித்து தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்குங்கள்.