முக்கிய செய்திகள்

வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் : கமல் அழைப்பு


தமிழகத்தில் வேடிக்கை பார்ப்பவர்களே அதிகம், வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது :

சில சாலைகளில் மின்சாரம் அபாயம் என்று பெயர்ப்பலகை வைத்திருப்பதை பார்த்திருப்போம். அந்த மாதிரி தமிழ்நாட்டுக்கே போர்டு வைக்கலாம் என்றால் பார்வையாளர்கள் அபாயம் என்று பலகை வைக்கலாம். நம் நாட்டில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கை பார்க்கும் மனிதர்களே ஏராளம்.

எது எப்படி போனால் என்ன அப்படின்னு பார்த்துக்கொண்டே இருக்க பழகிவிட்டோம். பழகிவிட்டோம் என்றால் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். நானும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தேன், முடியவில்லை. பார்த்தது போதும் பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர அழைப்பு விடுத்த கமல் அடுத்த கட்டமாக மக்களைப் பார்த்து வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் என்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.