முக்கிய செய்திகள்

மார்ச் 10,11ஆம் தேதிகளில் கமல்ஹாசன் ஈரோடு, திருப்பூர் சுற்றுப்பயணம்


மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மார்ச் 10,11ஆம் தேதிகளில் கமல் ஈரோடு, திருப்பூர் செல்கிறார். அவிநாசி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். கட்சி கொடியை ஏற்றி வைக்கும் கமல் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.