முக்கிய செய்திகள்

தான் தொடங்கும் கட்சிக்கு செய்தி தொடர்பாளர்களை நியமித்தார் கமல்..

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கென தனியாக 2 செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளார்.

அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தள்ள கமல்ஹாசன், சினிமாவுக்கும், அரசியலுக்கும் தனித்தனியாக 2 செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளார்.

அரசியலுக்கென தமிழக ஊடகங்களுக்கு ப.ராஜநாராயணனும், தேசிய ஊடகங்களுக்கு மாந்தவி ஷர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வார இதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணியைத் தொடங்கிய பா.ராஜநாராயணன், தொலைக்காட்சிகளில் தொடர்களை இயக்கியுள்ளார்.

மாந்தவி ஷர்மா, ஷாருக்கான் நடித்த படங்களுக்கு செய்தித் தொடர்பாளராக பணிபுரிந்தவர்.