முக்கிய செய்திகள்

கமலின் புதிய கட்சி பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’..


கமல்ஹாசன் புதிதாக தொடங்கியுள்ள “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். மதுரை பொதுக்கூட்ட மேடைக்கு வந்ததும், கட்சி கொடியை ஏற்றினார். 6 கைகள் இணைந்த வெள்ளை நிற கொடியாக இருந்தது. பின்னர் பேசிய கமல், ’மக்கள் நீதி மய்யம்’ என கட்சியின் பெயரை அறிவித்தார்.

‘இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல. மற்றவர்களின் அரசியல் நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாக நடந்துகொள்ள வேண்டும். நான் அறிவுரை சொல்லும் தலைவன் அல்ல. அறிவுரை கேட்கும் தொண்டன்’ என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்டது. இதில், கமலின் நண்பரும், பேராசிரியருமான கு.ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீபிரியா, கமீலா நாசர், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், ராஜ்குமார், சவரிராஜன், ராஜசேகர், மூர்த்தி, மௌரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.