முக்கிய செய்திகள்

கமலின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமையட்டும்: சீமான் நேரில் வாழ்த்து


கமல்ஹாசன் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அப்போது குறுக்கிட்ட கமல்ஹாசன் இந்தக் கேள்விக்கு மட்டும் நானே பதில் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு, “சீமானுக்கு என்னைத் தெரியும், எனது சினிமாவைத் தெரியும், எனது கொள்கையைப் பற்றி இப்போதே தெரிய வாய்ப்பில்லை. எனவே, எனது கொள்கையை முழுமையாக நான் வெளிப்படுத்திய பிறகு அவர் எடுக்க வேண்டிய முடிவு அது. இன்று, எனது அரசியல் பயணத்துக்கு வாழ்த்து கூறவே அவர் வந்திருக்கிறார்” என்றார்.