முக்கிய செய்திகள்

இருப்பவர்கள் போதாதென விஜய்க்கும் கமல் அழைப்பு: ப்ளீஸ்… விட்ருங்கப்பா தமிழ் நாட்ட….!

நடிகர் விஜயை தமக்கு பிடித்த தம்பி எனத் தெரிவித்துள்ள கமல், அவர்  அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டா் பக்கத்தில் ரசிகா்கள், கட்சி உறுப்பினா்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். #AskKamalHaasan என்ற ஹேஷ்டேக்கில் அனைவரும் கேள்விகளை எழுப்பினா். அந்த கேள்விகளுக்கு கமல்ஹாசனும் பதில் அளித்தார்.

அப்போது, ஒருவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், “எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் (விஜய்) எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். ரஜினியும், கமலும் அரசியல் குறித்துப் பேசாமல் இருந்த போது, விஜய் அந்தத் திசையை நோக்கி வேகமாக நகர ஆரம்பித்தார். அவரது படங்களிலும் அதற்கான அடையாளங்கள் தெரிந்தன. ஆனால் “பெருசுகள்” இரண்டும் களமிறங்கியதைப் பார்த்து விட்டு விஜய் “இது என்ன கலாட்டா” என அமைதி காக்கத் தொடங்கி விட்டார். இப்போது கமல் அவரையும் அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்துள்ளார். சும்மா இருக்கும் சங்கை ஊதி விடுகிறார் கமல். இது எங்கு போய் முடியுமோ.. .ஏற்கனவே சினிமா பின்னணியுடன் எதிர்கால முதலமைச்சர்கள் கனவில் சிலர் வலம் வந்து கொண்டிருக்கையில், அந்தக் கூட்டத்தில் ஒருவராக விஜயும் சேர்வாரா அல்லது புத்திசாலித்தனமாக ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Kamal Welcome Vijay to politics