முக்கிய செய்திகள்

“சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று” : கமல்ஹாசன்

‘சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்டவரைப் பொதுமக்களே அடித்துக் கொன்ற விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தொடர்ச்சியாக சில சம்பவங்கள் இதுபோல நடைபெற்றுள்ளதால், ‘சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று’ என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

“வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது கவலை அளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு, பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.