முக்கிய செய்திகள்

காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் காலமானார்..


காஞ்சிபுரம் மடத்து தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 3 மாதங்களாக மூச்சுத்திணறலால் ஜெயேந்திரர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

ஜெயேந்திரர், 1935-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கியில் பிறந்தார். 1954-ம் ஆண்டு இளைய மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மடத்தின் 69-வது தலைவராக 1994-ல் ஜெயேந்திரர் பொறுப்பேற்றார்.