”சென்னை கீழ்ப்பாக்கம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 141 கிரவுண்ட் இடத்தில் 49 கிரவுண்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் 99 வருடத்திற்கு குத்தகைக்கு விடபட்ட இந்த நிலத்தில் அஞ்சலகம் செயல்பட்டு வந்துள்ளது. குத்தகைக்கு எடுத்தவர் இறந்து விட்டதால் அவருடைய வாரிசுகள் இந்த இடத்தில் இருந்த கட்டங்களில் வாடகையை வசூல் செய்துள்ளனர். ஆனால் கோயிலுக்கு பணம் செலுத்தாமல் வந்துள்ளனர். வரிப்பாக்கி ரூ.12 கோடிக்கு மேல் அவர்கள் செலுத்தவில்லை என்றார்.
திமுக ஆட்சி பதவியேற்ற பின் சுமார் 1000 கோடி ரூபாய்கான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று செய்தியாளர்களிடம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார் உடன் அறநிலையத்துறை இயக்குனர் உடனிருந்தார்