காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..


காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறை காஞ்சிபுரம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்த குறிப்பேட்டில், திமுக நிறுவனர் அறிஞர் அண்ணாவின் இல்லத்திற்கு திமுகவின் தலைவராக வந்திருப்பதாகவும், அதனால் புத்துணர்வைப் பெற்றிருப்பதாகவும் எழுதிக் கெயெழுத்திட்டுள்ளார்.