கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

2018-ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விருது!

அவர் மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.