
டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஜே.என்.யூ மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் சந்தித்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளதால் கன்னையா குமார் விரைவில் காங்கிரசில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் தலைமையுடன் தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் வட்கம் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் மேவானிக்கு காங்கிரஸ் உதவியது.