இறைவனால் “அம்மையே“ என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் என்ற அழைக்கப்படும் புனிதவதியின்.
இறைப்பக்தியை நினைவூட்டும் வகையில் வருடந்தோறும் “மாங்கனி இறைத்தல்“ திருவிழா வருடம் தோறும் ஆனி மாதத்தில் வெகுவிமர்சையாக நடைபெறும்.
இந்தாண்டு காரைக்காலில் மாங்கனி திருவிழா நேற்று மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. இன்று திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில், திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தாண்டு மாங்கனி திருவிழா தொடங்கியுள்ள நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான காரைக்கால் அம்மையார்-பரம தத்தர் திருக்கல்யாண நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
இதில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகிற 16 ஆம் தேதியன்று மாங்கனிகளை பக்தர்கள் இறைத்து சுவாமியை வழிபடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.