
பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி புகழ்பெற்ற காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம்நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.