காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலையால் காரைக்கால் துறைமுகத்தில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பை அடுத்து சென்னை, பாம்பன், நாகை, கடலூர், காரைக்கால்,நாகை,தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடல் சீற்றமாக காணப்படும் என எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா வழியாக சத்தீஸ்கரை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.