
அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் தொடரவும், துணை வேந்தர் சூரப்பாவை நீக்கவும் வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லுாரி எதிரே போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சிவகங்கை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் குமார், சிவகங்கை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராஜ் குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் இளைஞர் அணியினர்,மாணவர் அணியினர் மற்றும் ஏராளமான கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி, படங்கள்
சாய் தர்மராஜ்