காரைக்குடியில் அப்பலோ ரீச் மருத்துவக்குழு சார்பாக காரைக்குடி தொழில் வணிகக் கழக உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையின் மருத்துவக்குழுவின் சார்பில் காரைக்குடி தொழில் வணிகக்கழக அலுவலகத்தில், நிர்வாக அதிகாரி செல்வகுமாரி லாவண்யா ஏற்பாட்டில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், இராகுல், நாராயணண், சக்கரவர்த்தி, ஆசைச்செல்வன் ஆகியோர் 75 பேருக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழக்கினார்கள்.
மருத்துவ முகாமிற்கு வந்த அனைவருக்கும் இரத்த அழுத்தம், இசிஜி, எடை உயரம், இரத்தக்கொழுப்பு சோதனை செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் எஸ்.கண்ணப்பன், பொருளாளர் கே.என்.சரவணன்,துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, இணைச்செயலாளர் வி.ஆர்.ராமநாதன், மேலாளர் அழகப்பன், அப்பலோ ரீச் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ஹரி, ஒருங்கிணைப்பாளர்கள் சாய்தர்மராஜ், முருகேசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தார்கள்.
மாலை நடைபெற்ற தொழில் வணிகக் கழக பொதுக்குழு கூட்டத்தில் அப்பலோ ரீச் மருத்துவமனை சார்பில் நிர்வாக அதிகாரி செல்வகுமாரி லாவண்யா My Apollo Privilege Card-ஐ தொழில் வணிகக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்