காரைக்குடி அப்பலோ மருத்துவமனை :112 பக்கவாத நோயாளிகளுக்கு த்ரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை..

செய்தியாளர்கள் சந்திப்பின் போது காரைக்குடி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகி

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 112 நோயாளிகளுக்கு திரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. இந்த பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்தோரில் அதிகம் கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமைனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அப்பலோ மூத்த பொதுநல மருத்துவர் திருப்பதி சங்கரலிங்கம் பேசும் போது..

அப்பலோ ரீச் மருத்துவமைனை மிகவும் பின்தங்கிய தென் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு தரமான சிகிச்சையளித்துவருவதாக தெரிவித்தார்.


மேலும் இந்தியாவில் தற்போதைய நிலையில் நோய்பாதிப்பு மற்றும் இறப்புக்கான முக்கிய காரணங்களுள் ஒன்றான பக்கவாதம் இருந்து வருகிறது. வாழ்க்கை முறை மற்றும் சமூக அமைப்பில் மாற்றங்கள் மற்றும் மேற்கத்தியமயமாக்குதல் போன்ற காரணங்களால் பக்கவாதம் ஏற்படுவதற்கு ஒரு நிலையான காரணியாக உள்ளது.


இதில் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற மக்களே போதிய சிகிச்சையளிக்க இயலாத நிலையில் பாதிப்பு அதிகமாக இருந்துவந்தது. இதனால் இறப்பும் அதிகரித்து வந்தது.
நகர்புறபகுதிகளில் பக்கவாத த்ரோம்போலிசிஸ் சிகிச்சை பரவலாக கிடைத்து வருகிறது. ஆனால் கிறாமப்புறங்களில் சுமார் 3 சதவிகிதத்திற்கு குறைவாகவே சிகிச்சையே அளிக்கப்பட்டு வருகிறது.காரணம் நரம்பியல் நிபுரனர்கள் பற்றாக்குறையும், அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால் அதை கையாளும் திறன் இல்லாததுதான்.
இந்நிலையில் எங்கள் மருத்துவமனை 112-ல் 1 நோயாளிக்கு மட்டுமே இரத்தப்போக்கு சிக்கல் இருந்தது. அவருக்கு தீவிர சிகிச்சையளித்து முழுமையாக குணப்படுத்தினோம். இதுபோல் இஸ்மிக் ஸ்ட்ரோக் ஏற்பட்ட நோயாளிகள் 4 அல்லது 5 மணி நேரத்திற்குள் கொண்டுவரப்பட்டதால் த்ரோம்போலிசிஸ் சிகிச்சை மூலம் அவர்களை காப்பாற்ற முடிந்தது.

2012 முதல் 2021 ஆகஸ்ட் வரை 112 நோயாளிகளுக்கு எனதுஎனது தலைமையில் மருத்துவக் குழு சிகிச்சையளித்து காப்பாற்றியுள்ளோம். 28 வயது முதல் 85 வயது வரை சிகிச்சையளித்துள்ளோம் பக்கவாதத்தால் பாதிக்கப்ட் 85 வயது மூதாட்டியை சிகிச்சையளித்து முன்பு போல் நடந்து செல்ல வைத்துள்ளோம். கிராமப்புற நோயாளிகளே அதிக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.

இத்தகைய சிறப்பு மருத்துவத்தை வழங்க அப்பலோ மருத்துவமனையின் நிர்வாகம், மருத்துவர்கள்,செவிலியர்கள், அனைத்து பணியாளர்களின் ஒருங்கிணைப்பும்,செயலுமே முக்கிய காரணமாகும் என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அப்பலோ மருத்துவமனை நிர்வாகி திருமதி.லாவண்யா, மூத்த பொதுமருத்துவர் திருப்பதி சங்கரலிங்கம், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கோகுல கிருஷ்ணன், மருத்துவர் முகமது அசீம், மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் வசந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை,மதுரை திருச்சி போன்ற நகரங்களுக்கு இணையாக பக்கவாதத்திற்கு த்ரோம்போலிசிஸ் சிகிச்சை காரைக்குடியிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது
நகர்புறங்களை விட கிராமப்புற மக்களுக்கு சிறந்த சேவை வழங்கிய அப்பலோ ரீச் நிர்வாகத்திற்கும்,மருத்துவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிப்போம்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…

Recent Posts