காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதிய நவீன கேத்லேப்(Advanced New Cath Lab) : அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்…

சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கேத்லேப்(Advanced New Cath Lab)தொடங்கியுள்ளது. இந்த புதிய நவீன கேத்லேப்(Advanced New Cath Lab) மூலம் சர்வதேச தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்கும் பயணத்தில் இது மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.
காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதிய நவீன கேத் லேப்-பை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர் பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்தார்.

புதிய நவீன கேத்லேப்(Advanced New Cath Lab) -யை தொடங்கி வைத்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசும் போது,
பொதுமக்களுக்கு இணையற்ற சுகாதார சேவைகளை செய்வதில் கலங்கரை விளக்கமாகஅப்பலோ மருத்துவமனை திகழ்கிறது என்றால் அது மிகையாகாது, மேலும் ஒரு மைல் கல்லாக புதிய நவீன கேத் லேப் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்பலோ மருத்துவமனை 12 அண்டுகளுக்கு முன்னால் முன்னாள் மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் முயற்சியில் அப்போதை பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இது போன்ற அர்பணிப்புடன் அப்பலோ மருத்துவமனை தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவகங்கை மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக கூறப்பட்டாலும்,முன்னேறிய மாவட்டங்களுக்க இணையான மருத்துவ வசதி ஏற்படுத்தி உள்ள இந்த மருத்துவமனை மேன்மேலும் வளர்ந்து மக்கள் சேவையாற்ற அவர்களுக்கு பாராட்டுகளையும்,நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

திறப்பு விழாவில் முன்னிலை வகித்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி பேசும் போது முன்னால் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பொதுமக்களுடைய நலன் கருதி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அப்பலோ நிறுவனத்தை இங்கு உருவாக்க கடும் முயற்சி எடுத்ததன் பலனாக இங்க உருவாகிய அப்பலோ மருத்துவமனை பல ஊழை எளிய மக்களுக்க சிறப்பான மருத்துவ சேவையை ஆற்றி வருகிறது. இரவு பகல் பாராமல் மருத்துவ சேவையை வழங்கி வருகிறார்கள். எங்களுடைய பரிந்துரைகளை ஏற்று கட்டண சலுகையையும் பொதுமக்களுக்கு வழங்கிவருகின்றனர் . தற்போது புதிய நவீன கேத்லேப் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் மருத்துவ சேவை மக்களுக்கு வழங்கும் எனத் தெரிவித்தார்.


அப்பலோ மருத்துவமனை மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரி பி.நீலகண்ணன் பேசும் போது. இன்று புதிய நவீன கேத் லேப் திறப்ப விழாவை முன்னிட்டு விரிவான இருதயம் பரிசோதனை ரூ.999-க்கும், ஆஞ்சியோகிராமிக்கு ரூ.14,999-க்கும் வரம் மே13 முதல் சூன்-30 வரை இச்சலுகை தொடரும் என்பதை மிகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.


அப்பலோ மருத்துவமனை நிர்வாகி லாவண்யா விழாவை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் அப்பலோ மார்கெட்டிங் பொது மேலாளர் கோ.மணிகண்டன், மருத்துவர் திருப்பதி மற்றும் மருத்துவர்கள்.ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்

தென்மேற்கு பருவமழை 19-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு….

Recent Posts