காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை மறுமாழ்வு மையம் : ஓராண்டில்125 பேருக்கு மறுவாழ்வு சிகிச்சையளித்து சாதனை…

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் கடந்தாண்டு புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரால்மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைக்கப்பட்டது.
தென் தமிழகத்தில் முதன் முறையாக மருத்துவமனையுடன் மறுவாழ்வு சிகிச்சை மையம் காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டில் பாதிக்கப்பட்ட 125 பேர் மறு வாழ்வு சிகிச்சை மையத்தின் மூலம் சிகிச்சைபெற்று பூரணநலத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

அப்பலோ ரீச் மருத்துவமனை, காரைக்குடி அதனைத்சுற்றியுள்ள கிராமங்கள் அண்டை மாவட்ட மக்களுக்கு குறைந்த செலவில் நிறைவான மருத்துவசேவை வழங்கிவருகின்றது. நவீன மருத்துவத்தில் தலைசிறந்து விளங்குகிறது.

மறுவாழ்வு சிகிச்சை என்பது காயங்கள் கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்கள் உட்பட நோய்களின் தாக்கத்தை பெருமளவு குறைக்க உதவி வருகிறோம்.

கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட அப்பலோ மறுவாழ்வு மையத்தில்
காயங்கள் மற்றும் அதிர்ச்சி,எலும்பு முறிவுகள்(உடைந்த எலும்புகள்),
அதிர்ச்சிகாரமான மூளைக்காயம் மற்றும் முதுகுத் தண்டு காயங்கள். பக்கவாதம்,

தொழில் சார் சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வருகிறது.
இந்த மறுவாழ்வு மையத்தில்
சிகிச்சைக்கென தனி அறை.
பொதுவார்டு,
நரம்பியல் மறுவாழ்வு,
நர்சிங் ஆதரவு,
உணவியல் நிபுணர் ஆதரவு,

மறுவாழ்வு அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் செயல்படுகிறது.
பிசியாட்ரிஸ்ட் சிகிச்சை,
பேச்சு சிகிச்சை,
பிஸியோதெரபி

சிகிச்சை மிகக் குறைந்த செலவில் வழங்கப்படுகிறது.
இந்த மறுவாழ்வு மையத்தில் விபத்தால் மூளை பாதிக்கப்பட்டு கோமோ நிலையிலிருந்தவர்கள் மீட்கப் பட்டுள்ளனர். இதுபோல் சாலை விபத்தில் கோமோ நிலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உணர்வு பெற்று நன்கு குணமாகி வீடு திரும்பியுள்ளனர் .

மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் மூளை மற்றும் நரம்பு பாதிப்படைந்தவர்களுக்கு பல்வேறு வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு சிறிய மைதானத்தில் காலில் உணர்வு ஏற்படுத்த நான்கு விதமான சிகிச்சை வழங்கப்படுகிறது. புல்தரையில் நிற்க வைப்பது, மணல் தரையில் நிற்க வைப்பது,கூழாங்கற்கள் மீது நிற்க வைப்பது. மேடு,பள்ளம் ஏற்படுத்தி அதை உணரவைக்கும் முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

மறுவாழ்வு மையத்தில் இதுவரை கடுமையாக பாதிக்கப்பட்ட 125 பேருக்கு சிறப்பான சிகிச்சையளித்து மறுவாழ்வு பெற்றுள்ளனர். ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்
பிசியாட்ரிஸ்ட்
டாக்டர் டி.பாலமுரளி MBBS., MD., PMR.,
டாக்டர் ஜெய்ஹார் MBBS., PMR.,
பிசியோதெரபிஸ்ட்
டாக்டர்.பிரியதர்ஷ்னி BPT.,
டாக்டர் ராஜ் குமார் MDT, Neuro.
நரம்பியல் நிபுணர்
டாக்டர்.மீனாட்சி சுந்தரம்,

திரு பி.நீலகண்ணன், சிறப்பு முதன்மை அதிகாரி அப்பலோ மருத்துவக் குழுமம் மதுரை, அப்பலோ ரீச் மருத்துவமனை நிர்வாக அதிகாரி செல்வகுமாரி லாவண்யா, மற்றும் .மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள், செவிலியர்கள்,பேச்சு சிகிச்சை நிபுணர், பிஸியோதெரபி, உணவியல் நிபுணர் மற்றும் ஊழியர்கள் அப்பலோ ரீச் மருத்துவமனை நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
சாலை விபத்தில் கோமோ நிலையிலிருந்து மறு வாழ்வு மையத்தில் சிக்சைபெற்று மீண்ட திருவாடனையைச் சேர்ந்த சங்கர் என்பவர் பேசினார்.நான் கைகாட்டி அருகே சாலைவிபத்தில் காயமடைந்து பலமணி நேரம் அங்கே மயங்கிய கோமோ நிலையில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். தற்போது முழு உடல்நலத்துடன் உள்ளேன். எனக்கு மறுவாழ்வு அளித்த மருத்துவமனைக்கு கண்ணீரோடு நன்றி கூறினார் அவரின் பேச்சு அனைவரையும் நெகிழ்சியில் ஆழ்த்தியது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்

மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி: முதல்வர் மு.க.ஸ்டாலின் ..

பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு..

Recent Posts