
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் திமுக இலக்கிய அணிச் செயலாளார் தென்னவன், காரைக்குடி நகர்மன்ற காங்கிரஸ்,திமுக உறுப்பினர்கள் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொங்கல் கொண்டாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கொடுத்த பொங்கல் பரிசுத் தொகுப்பை ப.சிதம்பரம் உறுப்பினர்களுக்கு வழங்கினார். உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
செய்தியாளர்களிடம் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது: பொங்கல் திருநாள் 3 நாட்கள் கொண்டாடுகிறோம். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். வரும் ஜனவரி 21-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காரைக்குடி நகருக்கு வருகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும், அங்கு நாங்கள் அமைத்துள்ள வளர் தமிழ் நுாலகத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் முதல்வரை திரளாக மக்கள் வரவேற்று விழாவில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறேன் என்றார். வளர் தமிழ் நுாலகம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரும் பயனை வழங்கும் என்றார்.
செய்தி& படங்கள்
சிங்தேவ்