
காரைக்குடி அம்பேத்கார் சிலை அருகில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் 3 மணி நேரமாக போராடுகிறார்
காரைக்குடி செஞ்சைப் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது-32) என்பவர் இன்று மாலை 5 மணியளவில் அம்பேத்கார் சிலை அருகே முத்து மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியின் மீது நின்று சட்டைளைக் கழற்றி போராட்டம் செய்தார்.

இதனைக்கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், காவல்துறையினர் வந்து அவரிடம் பேசியபோது அவர் தனது தம்பிக்கு விபத்து ஏற்பட்டது அதனை முறையாக காவல் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்துவதாக கூறினார்.அவரின் தம்பி தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாம், அவரின் கால் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் நேரில் வரவேண்டும் என்றார், தீயணைப்பு துறையினர் மீட்க போராடி வருகின்றனர். அந்தப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடினர்.
இந்நிலையில் அந்த பகுதிக்கு தற்போது மாங்குடி எம்எல்ஏ-வும் வந்துள்ளார். முருகன் ஏற்கேனவே செஞ்சை பகுதியில் இது போல் செல்போன் கோபுரம் மீது போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாங்குடி எம்எல்ஏ, மற்றும் காவல்துறையின் பேசினர். தீயணைப்பு துறையினரின் முயற்ச்சியால் ஒருவழியாக முருகன் கீழ் இறங்கி வந்தார்.. பின்னர் அவர் நடந்தே வடக்கு காவல் நிலையத்திற்கு சென்றார். காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்