
சென்னையை அண்மையில் தாக்கிய புயலால் ஏராளமானோர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் திரட்டிய “சென்னை புயல் – வெள்ளம் நிவாரண நிதிக்காக ரூ 3, 40,000/=(மூன்று லட்சத்தி நாற்பதாயிரம்) நன்கொடையாக வங்கி காசோலையினை, இன்று டிசம்பர் 12-ம் தேதி மாலையில் சிவகங்கை சென்று மாவட்ட ஆட்சியர் திருமிகு. ஆஷா அஜித் IAS அவர்களிடம் தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் S. கண்ணப்பன், பொருளாளர் KN. சரவணன்.(SLP), செயற்குழு உறுப்பினர் K. பெத்த பெருமாள் ஆகியோர் வழங்கினார்கள்.உடன் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திருமிகு. Dr. பிரபாவதி அவர்கள் இருக்கிறார்கள்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்